தெலங்கானா எஸ்ஐஆர்! 2 லட்சம் வாக்காளர்களுக்கு காரணம் குறிப்பிடாமல் நோட்டீஸ்
தெலங்கானா எஸ்ஐஆர் நடைமுறையில் 2 லட்சம் வாக்காளர்களுக்கு காரணம் குறிப்பிடாமல் நோட்டீஸ் வந்துள்ளது பற்றி..
தெலங்கானாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில், சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு காரணம் ஏதும் குறிப்பிடப்படாமல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுவும், இந்த காரணம் குறிப்பிடப்படாமல் நோட்டீஸ் பெறப்பட்டவர்களில் 35 மற்றும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம், பெரும்பாலானோர் ஆண்கள் என்று வெளியான தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் நடைமுறையில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக ஏதேனும் கேள்வி அல்லது ஒரு வகைப்படுத்தப்பட்டுள்ளார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
எழுத்துப் பிழை, முகவரி அல்லது பெற்றோர் விவரங்கள் என ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால் அவர்கள் அது குறித்து விளக்கம் அளித்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம்.
இப்படி காரணம் குறிப்பிடப்படாமல் நோட்டீஸ் வந்தால், வாக்காளர்கள் எந்த விதமான ஆதாரத்தை சமர்ப்பித்து விளக்கம் கொடுக்க வேண்டும், 35 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள வாக்காளர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்றால் இந்த வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக ஏதேனும் வகைப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதற்கு காரணம் என்ற பெட்டி காலியாக விடப்பட்டுள்ளது, ஆனால், வாக்காளர்களுக்கு காரணம் குறிப்பிட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது, இதுவும் தற்போது பிரச்னைதான், அதாவது அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பது தெளிவாகிறது, ஒரு பட்டியலில் காரணமில்லை, ஒரு பட்டியலில் இருக்கிறது என்றால் மற்ற தகவல்களிலும் முரண்பாடுகள் இருக்கலாம்தானே என்கிறார்கள் நோட்டீஸ் பெறப்பட்டவர்கள்.
நோட்டீஸ் பெற்றவர்களில் ஒருவரும் 35 வயதுக்கு உள்பட்டவர்கள் இல்லை. 36 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், 31 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் குறைந்தது ஒரு பெயராவது உள்ளது.
நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட 2,01,249 வாக்காளர்களின் பட்டியலில் காரணம் என்ற பெட்டி மட்டும் காலியாக விடப்பட்டுள்ளது. இது பிரிண்டிங் பிழையா, கம்ப்யூட்டர் பிழையா?
குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பது ஏன்? சந்தேகம் என்றால் அனைத்து வயதினரும்தானே இருக்க வேண்டும்? அது மட்டுமல்ல, பெரும்பாலானோர் ஆண்கள். ஏதோ ஒரு விதிமுறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் பலரும் கூறும் கருத்தாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.