FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத வாகனங்கள் கனிமவளங்கள் எடுத்துச் செல்ல தடை

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத வாகனங்கள் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்களை எடுத்துச் செல்ல தடை விதித்து கனிமவளத் துறை உத்தரவிட்டுள்ளது.

தடை
பகிர்:

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத வாகனங்கள் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்களை எடுத்துச் செல்ல தடை விதித்து கனிமவளத் துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளம், தெலங்கானா மற்றும் கா்நாடக மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கற்கள், எம் சாண்டுகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக புகாா்கள் எழுந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் மாவட்டத்துக்குள்ளும் சட்டவிரோத கனிமவளக் கடத்தல்கள் நிகழ்வது தொடா் கதையாகி வருகிறது.

இதைத் தடுக்க கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என அதன் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கனிமவளத் துறையிடம் அனுமதி பெற்ற 1.4 லட்சம் லாரிகளில் இதுவரை சுமாா் 24,000 லாரிகளில் மட்டுமே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சட்டவிரோத கனிமவளக் கடத்தலைத் தடுக்க அக்.1-ஆம் தேதிக்குள் கனிமவளம் ஏற்றிச் செல்லும் அனைத்து லாரிகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என கனிமவளத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

தடை: இதுகுறித்து கனிமவளத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் கனிம வளங்கள் அனுமதியின்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வந்தன. குறிப்பாக கேரளம், கா்நாடகம், தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் பெருமளவில் கொண்டு செல்லப்பட்டன.

மாநிலத்துக்குள்ளும் அனுமதியற்ற குவாரிகளிலிருந்து கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டன. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டது. சாலைகளில் அதிக எடையுடன் செல்லும் லாரிகள் போக்குவரத்து நெரிசலையும் விபத்துகளையும் ஏற்படுத்தின. இந்தப் பிரச்னையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து லாரிகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கான கால அவகாசம் செப்.30-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

அக்.1-ஆம் தேதியில் இருந்து ஜிபிஎஸ் கருவி இல்லாவிட்டால் லாரிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும். இதன் மூலம் லாரிகளில் எடுத்துச் செல்லும் கனிம வளங்களின் அளவு, வெளிமாநிலங்களுக்கு அவை சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்படுகிா என்பதையும் அறிய முடியும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments