FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பிரச்னை சரிசெய்யப்பட்டது!

சென்னை மெட்ரோ ரயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் சரி செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது பற்றி...

சென்னை மெட்ரோ ரயில் - ENS
பகிர்:

சென்னை மெட்ரோ ரயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் சரி செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்களில் ஆன்லைன் மூலமாக பயணச்சீட்டு பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதுவரை பயணிகள் கவுன்டர்களில் டிக்கெட் பெற்றுக்கொள்ளுமாறும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (அக். 3) காலை தெரிவித்திருந்தது.

இதையடுத்து கோளாறு சரிசெய்யப்பட்டு தற்போது ஆன்லைன் டிக்கெட்சேவை வழக்கம் போல் இயங்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதுபற்றி எக்ஸ் பக்கத்தில்,

"சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மொபைல் செயலி உள்ளிட்ட இணையவழி டிக்கெட் முன்பதிவு சேவைகள் தற்போது சீராகச் செயல்படுகின்றன.

க்யூஆர் கொடு, சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, வாட்ஸ்ஆப், பேடிஎம், போன்பே வழியாகவும் ஆன்லைன் டிக்கெட் பெறலாம்.

டிக்கெட் கவுண்டர்களில் 'சிங்கார சென்னை அட்டை' (Singara Chennai Card) மற்றும் 'சிஎம்ஆர்எல் பயண அட்டைகள்' (CMRL Travel Cards) மூலமாகவும் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

summary

Chennai Metro Rail: The technical glitch has been rectified on online ticket

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments