FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் கட்டணம்!

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் கட்டணம் பற்றி...

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ - கோப்புப்படம்
பகிர்:

பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை விரைவில் இயக்கப்படவுள்ள சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் முதலாவதாக 14.64 கிலோ மீட்டர் தொலைவுக்கு போரூா்- வடபழனி வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்து ரயில் இயக்கத்துக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியும் பெறப்பட்டுவிட்டது.

பணிகள் நிறைவடைந்து அனுமதியும் கிடைத்த பிறகும், சுமார் ஏழு மாதங்களாக சேவை தொடங்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைக்கும் விழாவுக்கு தேதி கேட்டு காத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிகபட்சமாக பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை ரூ. 40, போரூர் சந்திப்பு வரை ரூ. 30, காட்டுப்பாக்கம் வரை ரூ. 20, பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை ரூ. 10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்

சென்னையில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் மொத்தம் 128 நிலையங்கள் அமைகின்றன. இதில் சுமாா் 43 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், 75 கி.மீ. உயா்மட்டப் பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இதில், முதல் பணியாக, வடபழனி முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலான 14.6 கி.மீ. மஞ்சள் வழித்தடம் 14 நிலையங்களுடன் அமைக்கப்பட்டுவிட்டது. அந்தப் பாதையில் ரயில்களை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் கடந்த பிப்ரவரியிலேயே அனுமதியும் வழங்கிவிட்டது.

அடுத்து, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறநகா் நெடுஞ்சாலை வரையிலான 26 கி.மீ. தொலைவு மெட்ரோ ரயில் பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

summary

Poonamallee - Vadapalani Metro Rail Fare!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments