மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?
மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்யவுள்ளது குறித்து...
தாராபுரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய், மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் இன்று(அக். 4) சாமி தரிசனம் செய்யவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
தாராபுரம் (தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் சி. ஜோசப் விஜய், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று(அக். 4) சாலைவலம் சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரம் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வருகிறார்.
Advertisement
Advertisement
இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை கோவை வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வருகிறார்.
கோவையிலிருந்து சாலை வழியில் வரும்போது, வழியில் பொதுமக்கள் அவருக்கு ஆங்காங்கே வரவேற்பு கொடுப்பதால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்ப்பதற்காகவே அவர் ஹெலிகாப்டரில் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் மேட்டுக்கடை பகுதியிலிருந்து தாசர்புரம் வரையில் 114 கி.மீ தொலைவுக்கு சுமார் 30 இடங்களில் சாலை வலம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
தாராபுரம் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் சி. ஜோசப் விஜய் சாமி தரிசனம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் வருகையையொட்டி, மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Reports indicate that Chief Minister Vijay, who is campaigning in the Dharapuram constituency, is set to offer prayers at the Moolanur Vanjiyamman Temple today (Oct. 4).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.