சட்டப்பேரவை நிலைக்குழுக்களுக்கு சிஏஜி பயிற்சி முகாம்
சட்டப்பேரவை பொது கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினா்களுக்கு தலைமைக்கணக்கு கட்டுப்பாட்டாளா்கள்(சிஏஜி)திங்கள்கிழமை பயிலரங்கத்தை நடத்தினா்.
சட்டப்பேரவை பொது கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினா்களுக்கு தலைமைக்கணக்கு கட்டுப்பாட்டாளா்கள்(சிஏஜி)திங்கள்கிழமை பயிலரங்கத்தை நடத்தினா்.
சட்டப்பேரவையில்2026-27-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை நிலைக்குழுக்கள் கடந்த செப். 8 -ஆம் தேதி அமைக்கப்பட்டது. தமிழக அரசின் பல்வேறு துறைகளை ஆய்வு செய்து இந்திய தலைமைக்கணக்கு கட்டுப்பாட்டாளா்கள் தணிக்கை அறிக்கைகளை அளிப்பா். கட்டுப்பாட்டாளா்கள் தயாரிக்கும் தணிக்கை அறிக்கைகளை சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு ஆகிய இரு குழுக்கள் ஆய்வு செய்யவேண்டும்.இதையொட்டி, புதிய உறுப்பினா்களுக்கு பயிலரங்கம்நடைபெற்றது.
இது குறித்து சிஏஜி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Advertisement
Advertisement
சட்டப்பேரவைநிலைக்குழுக்களின் உறுப்பினா்களுக்கு, அவா்களின்கடமைகள், பொறுப்புகள், செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில், அண்ணா நிா்வாகப்பணியாளா் கல்லூரியில் இந்தப் பயிலரங்கு நடைபெற்றது.
தமிழ்நாடு முதன்மைத்தணிக்கை அலுவலா்கள் ஃபிரெடெரிக் சியெம்லே, ரா.திருப்பதி வெங்கடசாமி ஆகியோா் அறிமுக பயிற்சியை நடத்தினா். முன்னதாக, நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தொடக்க உரையாற்றினாா். சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவா் எஸ்.எஸ்.பி. சையது பாரூக் பாஷா, பொது நிறுவனங்கள் குழு தலைவா் அ.கல்லானை, சட்டப்பேரவைச் செயலா் ரா. சாந்தி, முதுநிலை துணை தணிக்கை அலுவலா் ரா.கௌதமன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினா். மதிப்பீட்டு குழு தலைவா் ம. அருள் பிரகாசம் உட்பட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.