தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்லேகருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கேரளத்தின் முழு நேர ஆளுநராகவும், (மார்ச் மாதத்தில் இருந்து) தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்து வந்த ஆர்.வி. அர்லேகர், தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
அர்லேகர் ஆளுநராகப் பதவி வகித்த கேரளத்திற்கு சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மதூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கெளதம் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த இவர் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராக இருந்தவர்.
இதேபோல ஒடிசா, கர்நாடகம், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கும் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
Chief Minister Vijay has extended his congratulations to Rajendra Vishwanath Arlekar on his appointment as the Governor of Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.