அரசின் மெத்தனத்தால் யூனிட் ஒன்று ரூ.35 கொடுத்து வாங்கும் நிலை! - கனிமொழி எம்பி கண்டனம்!
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்கும் அரசின் திட்டத்துக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம்...
அரசின் மெத்தனத்தால் இன்றைக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையைத் தீர்க்க தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மின் வாரியம் இறுதி செய்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு ஏராளமான எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, தவெக அரசின் மெத்தனத்தால் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, இன்று (அக். 14) அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல், காற்று இல்லை, மழை இல்லை, என தினமும் கதையடித்துவிட்டுக் கொண்டிருந்தவர்கள், உண்மைகளை மறைக்க முடியாமல் இன்றைக்குத் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10-க்குக் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த அரசின் மெத்தனத்தால் இன்றைக்கு ரூ.35-க்கு வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொன்னால் கஜானா காலி என கையை விரிப்பவர்கள், இன்று கொள்ளை விலையில் கொள்முதல் செய்து தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்க உள்ளனர். இதுதான் தவெக அரசின் “மாற்ற” அரசியலா?” எனக் கூறியுள்ளார்.
Kanimozhi MP has condemned the government's lethargy, stating that TN has been pushed to a situation where it has to purchase a unit of electricity for Rs 35.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.