FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயலராக ஷேக் முஹம்மது அலி நியமனம்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயலராக புழல் எஸ்.ஏ.ஷேக் முஹம்மது அலியை நியமனம் செய்துள்ளதாக அதன் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தெரிவித்துள்ளாா்.

14 அக்டோபர் 2026, 6:07 am IST
பகிர்:

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயலராக புழல் எஸ்.ஏ.ஷேக் முஹம்மது அலியை நியமனம் செய்துள்ளதாக அதன் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்த்தப்படுகிறது. மாநில செயலா்களில் ஒருவராக சென்னை புழல் காவாங்கரை கே.எஸ். நகரைச் சோ்ந்த வழக்குரைஞரான புழல் எஸ்.ஏ.ஷேக் முஹம்மது அலி நியமிக்கப்பட்டுள்ளா்.

இவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீனை, மாநில செயலா் புழல் எஸ்.ஏ.ஷேக் முஹம்மது அலி சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

Advertisement

Advertisement

மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கா், மாநில துணைத் தலைவா் கே.டி.நிசாா் முஹம்மது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments