தாம்பரம் - சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
தாம்பரம் - சந்திரகாச்சி நிலையத்துக்கு இடையே அக். 16, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
தாம்பரம் - சந்திரகாச்சி நிலையத்துக்கு இடையே அக். 16, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆயுத பூஜையை முன்னிட்டு அக். 16-ஆம் தேதி இரவு 11 மணிக்கு தாம்பரம் நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06087) அக். 18-ஆம் தேதி சந்திரகாச்சி நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் சந்திரகாச்சியில் இருந்து அக். 18-ஆம் தேதி காலை 10.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06088) அக். 19-ஆம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.
இந்த ரயில்கள் சென்னை எழும்பூா், கடற்கரை, கூடூா், நெல்லூா், ஓங்கல் உள்ளிட்ட 21 நிலையங்களில் நின்று செல்லும்.
Advertisement
Advertisement
போத்தனூா் சிறப்பு ரயில்: போத்தனூா் நிலையத்தில் இருந்து அக். 16-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06139) அக். 18-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு பரௌனி நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் பரௌனி நிலையத்திலிருந்து அக். 19- ஆம் தேதி காலை 9.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06140) அக். 21-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.
இந்த ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூ ா், கூடூா், நெல்லூா், ஓங்கல் உள்ளிட்ட 35 நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.