FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரமும் மானிய கோரிக்கை விவாதமும்!

இன்றைய (செப். 1) சட்டப்பேரவை அலுவல் குறித்து...

1 செப்டம்பர் 2026, 7:49 am IST
தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்
பகிர்:

இன்றைய சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், ஆக. 17 முதல் தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் பல்வேறு துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது.

திங்கள்கிழமையில் (ஆக. 31) மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலன் உள்ளிட்ட துறைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, இன்று (செப். 1) நடைபெறவுள்ள சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

மேலும், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்த) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு, கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.

The debate on demands for grants in today's TN Assembly session

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments