இன்றைய செய்திகள் செப். 2 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புதிய சாலைகள், குடிநீர்த் திட்டங்களை முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
வழக்குகள் ரத்து!
திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
அரசுப் பேருந்திலிருந்து பழங்குடியின மாணவிகளை நடத்துநர் தள்ளிவிட்டதாக புகார்! 8 மாணவிகள் காயம்
அடுத்த பிரதமர்
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று தவெக எம்.எல்.ஏ. கனிமொழி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
திருப்பதியில் ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மாதிரி வைத்து இஸ்ரோ தலைவர் சிறப்பு பூஜை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் விஞ்ஞானிகளுடன் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் சரிவில் தங்கம் விலை: இன்றைய (செப். 2) நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 2, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 1,800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,11,600 -க்கும் கிராமுக்கு ரூ. 225 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,950 -க்கும் விற்பனையாகிறது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்.2) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கான நலத்திட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கு, ஒடிசாவில் டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(செப்.2) தில்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
திமுக முப்பெரும் விழா: விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு!
திமுகவின் முப்பெரும் விழா வருகிற செப். 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.2) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
துணைவேந்தர்கள் நியமன சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, லீமாரோஸ் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(செப்.2) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!
ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் உள்பட சுமார் 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,288 கனஅடியாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,721 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,288 கன அடியாக அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.