இன்றைய செய்திகள் செப். 4 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
மோடி பெருமிதம்
ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறன்களின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பலி 1,290 ஆக உயர்வு
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா்கள் 275 போ் உள்பட 4,798-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி வெள்ளிக்கிழமை 10-ஆவது நாளாக தொடா்கிறது.
Advertisement
Advertisement
உயிருடன் மீட்கப்பட்ட இருவர்
நேபாள வெள்ளத்தில் உருகுலைந்த நீா்மின் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களில் முதல்கட்டமாக இருவர் உயிருடன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 4) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இஓஎஸ்-5 செயற்கைக்கோள்
ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்ட இஓஎஸ்-5 செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விஜய் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு, முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.