இன்றைய செய்திகள் செப். 6 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளரா? காங்கிரஸ் பதில்
"பிரதமர் வேட்பாளராக விஜய் முன்னிறுத்தப்படுவார் என்று வெளிவரும் செய்திகள் பொய்யானவை. அதுபோன்ற கோரிக்கைகளை தவெக தரப்பிலிருந்து கூறவில்லை. ஆகையால், யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
2029 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை ராகுல் காந்திதான் வழிநடத்துவார்": காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்
சட்டம் - ஒழுங்கு நிலை அதிர்ச்சியளிக்கிறது: இந்திய கம்யூ.
சென்னையில் தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை வழங்கிட தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு
தவெக தலைமையிலான கூட்டணியின் பெயரை செப். 9-ல் அறிவிக்கவிருப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம்
சட்டப்பேரவையில் பதிலுரை வழங்க முதல்வர் விஜய் 3 நாள்கள் பயிற்சி பெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
தவெக ஆட்சியில் வெறும் வாய்ஜாலம் மட்டுமே: அதிமுக
தவெக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை: நீதி கிடைப்பதை உறுதிசெய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்
ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் உண்மை முழுமையாக வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், உதவி ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்
சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அடையாறு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் சாஸ்திரி நகர் காவல் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர்!
நடிகரும் ரேஸருமான அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது.
டபுள் டெக்கா் பேருந்தில் தீ விபத்து
லக்னௌவில் டபுள் டெக்கா் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி!
தில்லியில் கட்டட விபத்தில் நேர்ந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு தில்லியில் உள்ள சத்யா நிகேதன் அருகே உள்ள நானக்புரா குருத்வாராவில் செயல்பட்டு வந்த மாணவர் விடுதி கட்டடம் இன்று பிற்பகல் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் கட்டடத்தில் இருந்தவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!
பிரிக்ஸ் மாநாட்டையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்?
மக்களுக்கு என்ன தேவையோ அதை நாளை சட்டப்பேரவையில் முதல்வர் பேசுவார் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
1,500 ஆண்டுகள் பழமையான திருவலஞ்சுழி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
1,500 ஆண்டுகள் பழமையான திருவலஞ்சுழி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
பிகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து!
பிகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்
குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக: உதயநிதி விமர்சனம்!
தவெக நிர்வாகி கொல்லப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.
புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது? வெளியான தகவல்!
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்ட நிலையில், சென்னையின் 2-வது விமான நிலைய இடம் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளிப்பார்: அமைச்சர் அருண்ராஜ்
அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் விஜய் பதிலளிப்பார் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தெரிவித்தார்.
தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (செப். 6) தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
பிரதமர் வேட்பாளர்; தொண்டர்களின் மனநிலையில் இருக்கும் தவெக அமைச்சர்கள்: திருமாவளவன்
தொண்டர்களின் மனநிலையில் தவெக அமைச்சர்கள் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காவலர் நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!
காவலர் நாளை முன்னிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் தன்னுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.