FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பஞ்சமி நிலங்களைக் கண்டறிய ஆணையம்: பெ. சண்முகம் வரவேற்பு

பஞ்சமி நிலங்களைக் கண்டறிய தனியாக ஆணையம் அமைக்கப்படும் என்ற சமூக நீதித் துறை அமைச்சரின் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

9 செப்டம்பர் 2026, 12:52 am IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் - X | CPIM Tamilnadu
பகிர்:

பஞ்சமி நிலங்களைக் கண்டறிய தனியாக ஆணையம் அமைக்கப்படும் என்ற சமூக நீதித் துறை அமைச்சரின் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

பஞ்சமி நிலங்களைக் கண்டறிய தனியாக ஆணையம் அமைக்கப்படும் என்ற சமூக நீதித் துறை அமைச்சரின் அறிவிப்பை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. புதிதாக அமைக்கப்பட இருக்கும் ஆணையம், பஞ்சமி நிலங்களைக் கண்டறிவதுடன், அதை மீட்டு தகுதியான குடும்பங்களுக்கு ஒப்படைக்கச் செய்வது உள்ளிட்ட பணிகளை முழுமையாக செய்வதற்கான அதிகாரம் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும். இந்தப் பணிகளை நிறைவேற்ற காலவரையறை தீா்மானிக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்கல் இருந்த நிலையில் தற்போது 1.86 லட்சம் ஏக்கா் நிலம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சமி நிலம் என்று கண்டறியப்பட்ட நிலங்களை உடனடியாக பட்டியல் ஜாதி மக்களுக்கு மறு விநியோகம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments