மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக கூட்டணியின் அதிகாரப்பூர்வ பெயர்!
தவெக தலைமையிலான கூட்டணிக்கு பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது குறித்து...
தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தவெகவுடன் விசிக, மதிமுக, காங்கிரஸ், ஐஎம்யூஎல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிக் கூட்டம் இன்று (செப். 9) நடைபெற்றது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொகிதீன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில் தவெக கூட்டணிக்கான பெயர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்குப் பிறகு தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், கூட்டணியின் எந்தக் கட்சியில் இருந்து இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்கலாம், கூட்டணியின் பெயர், இடைத்தேர்தல் பிரசாரப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு தவெக கூட்டணியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரும் வெளியிடப்படவுள்ளது. ஆளும் தவெக கட்சிக்கு அதிக வரவேற்பு இருப்பதால், தவெகவில் இருந்தே இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கு கூட்டணிக் கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு கூட்டணிக் கட்சிகளுடன் பணிகளைத் திட்டமிடுவது, தொடங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Secular Social Justice Victory Alliance The name of the TVK-led coalition!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.