FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டி.ராஜா சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர்கள் நலம் விசாரிப்பு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

9 செப்டம்பர் 2026, 10:47 am IST
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் டி ராஜாவை, புதன்கிழமை காலை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்த அமைச்சர் அருண்ராஜ். - எக்ஸ்
பகிர்:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விசாரித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கு உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து முழு உடல் நல பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகச் செயலாளர் எம்.ஆர்.ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் டி.ராஜாவுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அவர் முழு உடல் பரிசோதனைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலத்துடன் உள்ளார்.

Advertisement

Advertisement

கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டி.ராஜாவின் மகளும் தேசியக் குழு உறுப்பினருமான அபராஜிதா, மாநிலக் குழு உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்து உதவி வருகின்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்து தோழர் டி.ராஜாவிடம் உடல் நலம் விசாரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் டி ராஜாவை, புதன்கிழமை காலை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தோம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

summary

T. Raja admitted to Rajiv Gandhi Government Hospital in Chennai; Ministers inquire about his health

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments