FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செங்குன்றம் புதிய பேருந்து நிலையத்தை திறப்பதில் என்ன பிரச்னை? மக்கள் வேதனை

செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது என்று கேட்டு பயணிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

9 செப்டம்பர் 2026, 12:19 pm IST
செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் - dps
பகிர்:

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, மூன்று மாதங்கள் ஆகியும், இன்னமும் திறக்கப்படாமல் இருப்பது குறித்து மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செங்குன்றம் புதிய பேருந்து நிலையத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவடைந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன.

எனினும், தமிழக அரசு போக்குவரத்து கழகம், புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை என அரசு பேருந்து பயணிகள் தங்களது வேதனைகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேரூராட்சி உள்ள செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் பணிகள் ஓராண்டாக நடைபெற்று வந்து கடந்த ஜூன் மாத இறுதியில் நிறைவடைந்தது. புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்ற தவெக அரசு விரைவில் பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்னமும் திறக்கப்படவில்லை.

குறிப்பாக தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் வெட்ட வெளியில், அரசு பேருந்துகளுக்காக கொளுத்தும் வெய்யிலில் காத்துக் கொண்டிருக்கும் பேருந்து பயணிகள், செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே நிழல் குடை அமைத்து தரக் கோரியும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், பேருந்து பயணிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், அச்சாலையை கடப்பதற்கு போக்குவரத்துக் காவல்துறை பணியமர்த்த வேண்டும் என்றும் செங்குன்றம் போக்குவரத்து போலீசருக்கு அரசு பேருந்து பயணிகள் அடுக்கடுக்காக கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

எனினும், இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இறங்கும் பயணிகள் கடும் துயரங்களை அடைவதாகவும் கூறுகிறார்கள்.

புதிய பேருந்து நிலையத்தின் விவரம்

செங்குன்றம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. இதனால், இப்பேருந்து நிலையத்திலிருந்து 36 வழித்தடங்களில், 202 பேருந்துகள் கடந்த 2025 ஜூன் மாதம் முதல் புழல் ஏரியின் எதிா்புறமுள்ள சாமியாா் மடத்தின் காலி வளாகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூா், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, புழல், கிராண்ட் லைன் மாா்க்கமாக வரக்கூடிய பேருந்துகள் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்ட சாமியாா் மடம் காலி வளாகத்துக்கு வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.

இங்கிருந்து இயங்கும் பேருந்துகளின் தடம்

1.திருவள்ளூா் மாா்க்கம்- 62 ‘பி’, 61 ‘ஆா்’, 65 ‘எச்’, 505, 505 ‘கே’

2.பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி மாா்க்கம்- 512, 547, 557, 557 ‘ஏ’ எக்ஸ்டன்ஸன், 557 ‘சி’, 557 ‘எம்’, 558 ‘ஏ’, 558 ‘பி’, 558 ‘சி’, 558 ‘பி’, 592, 593 கட்.

3.புழல் மாா்க்கம்- 113, 114, 114 ‘ஏ’, 242, 57, 157, 157 ‘இ’, 62, 62 ‘ஏ’, 62கட், 104, 104 ‘கே’, 57 ‘சி’, 57 ‘சி’ கட்.

4.கிராண்ட் லைன், அருமந்தை மாா்க்கம்- 57‘இ’, 57‘ஜி’, 36‘கே’, 36‘வி’, 58 ‘வி’என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

What is the problem opening Redhills bus terminus?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments