மேட்டூர் அணைக்கு தொடர்ந்து குறைந்து வரும் நீர்வரத்து: செப்.10 நிலவரம்!
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து குறைந்து வரும் நீர்வரத்து தொடர்பாக...
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2,958 கனஅடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. புதன்கிழமை காலை அணைக்கு வினாடிக்கு 3718 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2958 கன அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.28 அடியிலிருந்து 90.78 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 53.54 டிஎம்சியாக உள்ளது.
Continuous decline in water inflow to Mettur Dam: Status as of September 10!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.