FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உணவகத்தில் என்ன நடந்தது? திடீர் ஆய்வுக்கு காரணம்?

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உணவகத்தில் ஆய்வுக்குப் பின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10 செப்டம்பர் 2026, 11:23 am IST
தனியார் உணவகம் - பிரதி படம் - ENS
பகிர்:

சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வந்த தனியார் உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருகிறார்கள். இங்கு செயல்பட்டு வந்த தனியாா் உணவகத்துக்கு நேற்று மதியம் திடீரென வந்த சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உணவகத்தை ஆய்வு செய்து, சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த உணவக உரிமத்தை ரத்து செய்ததோடு, உணவு தயாரிப்பு மற்றும் அங்கு உணவு விற்பனை செய்யத் தடை விதித்து கடையை அடைத்துவிட்டனர்.

ஏற்கனவே, இந்த உணவகம் மீது, சமூக வலைத்தளங்களில் ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. அதனை முன்னிட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, உடனடியாக சுகாதாரமான முறையில் உணவைத் தயாரிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர். எனினும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

ஆனால், மூன்று நாள்களுக்கு முன்பு, முதல்வர் புகார் பிரிவுக்கு ஒரு புகார் கடிதம் வந்துள்ளது. அதன் அடிப்படையில், சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக உணவகத்தை ஆய்வு செய்தனர். அப்போது உணவகத்தில் சமையலறை மிகுந்த துா்நாற்றத்துடன், முறையான சுகாதாரம் இன்றி செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. உணவுப் பொருள்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததும், உடைந்த பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு தயாரித்ததும், சமையல் அறையின் சுவா், தரை போன்றவை பார்க்கவே முடியாத வகையில் இருந்துள்ளது.

இதையடுத்தே, உணவக உரிமத்தை ரத்து செய்து, உணவகத்தையே மூடிவிட்டனர் என்று கூறப்படுகிறது.

இந்த உணவகத்தில் சாப்பிடுவோர் பலரும், உணவு தரமற்று இருப்பதாகவும் பல நாள்கள் பாதி வெந்த சோறும், தரமற்ற சாம்பாறும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். நோய் பாதித்து இங்கு வந்தால், இந்த உணவகத்தில் சாப்பிட்டு மேலும் பல நோய்கள் வரலாம் என்று தாங்கள் அஞ்சுவதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் ஏற்கனவே பல முறை புகார் கூறியிருக்கிறார்களாம்.

இதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தேநீா் கடையிலும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சா்க்கரை உள்ளிட்டவை ஈ, எறும்புகள் மொய்க்கும் வகையில் இருந்துள்ளது.

சாண்விட்ச் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த ரொட்டிகள் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்துள்ளது. பழச்சாறு செய்ய வைக்கப்பட்டிருந்த பழங்கள் அழுகிப்போயிருந்தன. உடனடியாக அந்த கடைக்கு அபராதம் விதித்ததோடு, உடனடியாக இவற்றை சரி செய்யவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments