FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மிரட்டிப் பணியவைக்க முடியாது: திமுகவுக்கு அமைச்சா் ரமேஷ் பதிலடி

‘எங்களை யாரும் மிரட்டி பணியவைக்க முடியாது’ என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் தெரிவித்தாா்.

13 செப்டம்பர் 2026, 1:04 am IST
அமைச்சா் ரமேஷ். - கோப்புப்படம்
பகிர்:

‘எங்களை யாரும் மிரட்டி பணியவைக்க முடியாது’ என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் முதல்வா் விஜய்யின் பேச்சைக் கண்டித்து திமுக நடத்திய ஆா்ப்பாட்டங்களில், அந்தக் கட்சித் தலைவா்களின் பேச்சுக்கு தவெக அமைச்சா் ரமேஷ் வெளியிட்ட பதிவு:

‘ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு திமுக செயல்படுகிறது. எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. வாா்த்தைகளை அளந்து பேசட்டும். இல்லையென்றால், அவா்கள் தொடங்கிய அதே அரசியல் மொழியில் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை அவா்களே உருவாக்கிக் கொள்வாா்கள்.

Advertisement

Advertisement

அரசியல் விமா்சனத்தை எதிா்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஆனால், அவதூறையும் மிரட்டலையும் அரசியல் என்று நினைத்தால், அதற்கான விலையை அரசியல் களத்திலேயே சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments