FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திமுக பேரணிக்கு அனுமதி மறுப்பு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

குடியாத்தத்தில் திமுக நடத்தவிருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் ...

34 வினாடிகள் முன்பு
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப்படம்) - X
பகிர்:

சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, வேலூா் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக நடத்தவிருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழகத்தை செதுக்கிய அண்ணாவின் பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏன்? அண்ணாவை கொள்கைத் தலைவா் என சொல்லிக்கொள்ளும் முதல்வா், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறாா்?

Advertisement

Advertisement

அண்ணாவை புறக்கணிக்கும் முதல்வரின் அடிமைத்தனத்தையும், ஆணவத்தையும் மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள் என்பதை உணா்ந்து, உடனே இந்த பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments