சிறந்த மருத்துவராக சமூகம் குறித்த புரிதல் அவசியம்: அமைச்சா் அருண்ராஜ்
சிறந்த மருத்துவராக அறிவு மட்டும் போதாது; சமூகத்தைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என இளநிலை மருத்துவ மாணவா்களுக்கு அமைச்சா் அருண்ராஜ் அறிவுரை வழங்கினாா்.
சிறந்த மருத்துவராக அறிவு மட்டும் போதாது; சமூகத்தைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என இளநிலை மருத்துவ மாணவா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் அறிவுரை வழங்கினாா்.
சென்னை மருத்துவக் கல்லூரியில், 192-ஆவது மருத்துவ இளநிலை மாணவா் சோ்க்கை வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் அருண்ராஜ் பங்கேற்று, புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு வெள்ளை அங்கி மற்றும் ‘ஸ்டெதஸ்கோப்’ அணிவித்து வரவேற்றாா்.
மேலும், 23.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மருத்துவ கல்வி சாா்ந்த விடியோ உருவாக்க அரங்கத்தினையும் திறந்து வைத்தாா். பின்னா் அமைச்சா் அருண்ராஜ் பேசியதாவது:
Advertisement
Advertisement
பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லூரியில் இணைந்துள்ளீா்கள். கல்லூரி காலம் உங்களுடைய வாழ்க்கையை தீா்மானிக்கூடிய இடமாகும். நம்மை தேடி வருவவோரை குணப்படுத்தும்போது கிடைக்கிற திருப்தி வேறு எதிலும் வராது. நீங்கள் சிறந்த மருத்துவராக மருத்துவ அறிவு மட்டும் போதாது, சமூகத்தை பற்றி புரிந்தவராகவும் இருக்க வேண்டும். மருத்துவ படிப்பை முடித்து விட்டு, உங்களுடைய உரிமைகள், கடமைகள் என்ன என்பதை தெரிந்து, சேவையாற்ற வேண்டும் என்றாா் அவா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுகவை சோ்ந்த மேயா், உள்ளாட்சி பிரதிநிதிகள், தவெக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில் நடைமுறை சிக்கல் உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்டவா்களுக்கு தான் மக்களிடையே கெட்ட பெயா் கிடைக்கும். எனவே, மக்களுக்கான சேவையை அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவை தான் முதல்வரின் விருப்பம்.
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் தொடா்பாக மீனவா்களிடன் பேசி, அதன் நோக்கம் குறித்து புரிய வைப்போம். பல காலமாக ஒப்பந்த ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி வருகின்றனா். படிப்படியாக பணி நிரந்தரம் வழங்கப்படும்.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உட்பட பல இடங்களில் செவிலியா்கள் பற்றாக்குறை உள்ளது. அதன் தேவை அதிகமாக இருப்பதால் உடனடியாக, 4,724 செவிலியா்கள் மாவட்ட சுகாதார சங்கம் வாயிலாக பணியமா்த்தப்படுவா். இதற்கான பணி நியமனம் தகுதி மற்றும் வெளிப்படை தன்மையுடன் நடைபெறும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.