FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்புடன் நடைபெறுவது மகிழ்ச்சி: முதல்வர் விஜய்

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்புடன் நடைபெறுவது மகிழ்ச்சி என முதல்வர் விஜய் தெரிவித்தது குறித்து...

16 செப்டம்பர் 2026, 8:42 pm IST
முதல்வர் சி. ஜோசப் விஜய் - படம்: எக்ஸ்
பகிர்:

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்புடன் நடைபெறுவது மகிழ்ச்சி என முதல்வர் விஜய் புதன்கிழமை (செப். 16) தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நாளை (செப். 17) விமர்சையாக நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!

நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister Vijay expressed happiness on Wednesday (Sept. 16) that the consecration ceremony of the Meenakshi Amman Temple is being conducted successfully.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments