FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை மெரினா அருகே மெட்ரோ ரயில் அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை மெரினா அருகே மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டது பற்றி..

17 செப்டம்பர் 2026, 3:31 pm IST
தீ விபத்து - பிரதி படம் - Photo | PTI
பகிர்:

சென்னை மெரினா கடற்கரையில், ஔவையார் சிலை அருகே மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளது.

மெரினா கடற்கரைப் பகுதியில் ஔவையார் சிலைக்கு அருகே கண்டெய்னர்களை அடுக்கி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்தின் ஏசியிலிருந்து தீப்பற்றியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ரோ அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், மெரினா சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டமாகக் காட்சியளிக்கிறது. அங்குள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. புகை மூட்டம் காரணமாக அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்.

Advertisement

Advertisement

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், 2 வாகனங்களின் உதவியுடன் மெட்ரோ அலுவலகத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments