FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்! 12 கோபுரங்களில் கலசங்களுக்கு புனித நீர்!!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா கோலாகலம்...

42 வினாடிகள் முன்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்.
பகிர்:

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வியாழக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் உலகப் புகழ்பெற்றது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்.

இந்தக் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கோயிலின் மகா குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, புனரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இதனையொட்டி மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

Advertisement

Advertisement

குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கின. இதற்காக அமைக்கப்பட்ட 183 யாக குண்டங்களில், செப். 11-ஆம் தேதி முதல் சிறப்பு வேள்விகள் நடைபெற்று வந்தன. வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு 12-ஆம் கால யாகபூஜை நிறைவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை 5.45 மணிக்கு புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

வேத மந்திரங்களும், மேளதாள வாத்தியங்களும் முழங்க காலை 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

summary

The grand consecration ceremony (Kumbabishekam) at the Arulmigu Meenakshi Sundareswarar Temple in Madurai took place with great fanfare on Thursday morning. Lakhs of people, including ministers and Members of Parliament, participated in the event and offered their prayers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments