FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் நட்சத்திரப் பேச்சாளர்களாக 40 பேரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது குறித்து...

19 செப்டம்பர் 2026, 2:01 pm IST
தவெக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் நட்சத்திரப் பேச்சாளர்களாக 40 பேரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

மது​ராந்​தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் பிரசாரம் நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இதனிடையே, தவெக சார்பில் முதல்வர் விஜய் உள்பட காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் நட்சத்திரப் பேச்சாளர்களாகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

தவெக சார்பில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல்:

முதல்வர் விஜய், அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத், பெ. விஸ்வநாதன், வன்னி அரசு, மரிய வில்சன், எம்எல்ஏ முஸ்தபா, மணிகண்டன் (லயோலா மணி), மயூரி, சம்பத் குமார், கேதரின் பாண்டியன், அப்துல் ஜலீல், சிவக்குமார் (முகில் வீரப்பன்), அனந்த்ஜித் மகியா, அறிவழகன், ராஜ்குமார், தென்னரசு, வினோத், விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன், கமலி, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகைதீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், ரவிகுமார், சிந்தனைச் செல்வன், வைகைச்செல்வன், வீரவிக்னேஸ்வரன், ராவுத்தர், புகழேந்தி, செல்வின் இன்பராஜ்.

summary

Star Campaigners of TVK issued by ECI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments