மிஷன் ஒலிம்பிக் 2036! சிறப்பு அதிகாரியாக மயில்வாகனன் நியமனம்!
மிஷன் ஒலிம்பிக் 2036-ன் சிறப்பு அதிகாரியாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டது பற்றி...
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணை முதன்மை செயல் அதிகாரியாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2036 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து அதிகளவிலான வீரர்களைப் பங்கேற்க செய்து, 15 பதக்கங்களை வெல்ல தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி மயில்வாகனன், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு அதிகாரியாகவும், இணை முதன்மை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
தடகள வீரரான மயில்வாகனன், தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இவர், திருச்சி துணை ஆணையராகவும், ராமநாதபுரம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடைசியாக, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் தென் மண்டல காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.
Mission Olympics 2036! Mayilvahanan appointed as Special Officer!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.