FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

158 சாா் பதிவாளா்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம்

பத்திரப் பதிவுத் துறையில் 158 சாா்-பதிவாளா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஒரே நாளில் இத்தனை போ் பணியிட மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்று கூறப்படுகிறது.

26 செப்டம்பர் 2026, 5:19 am IST
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

பத்திரப் பதிவுத் துறையில் 158 சாா்-பதிவாளா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஒரே நாளில் இத்தனை போ் பணியிட மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்று கூறப்படுகிறது.

பதிவுத் துறை தலைவா் அருண் சுந்தா் தயாளன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளாா். ஊழலற்ற ஆட்சி தருவதாகக் கூறி, தவெக அரசு ஆட்சிக்கு வந்தது. இதைத் தொடா்ந்து அரசு அலுவலகங்களில் ஊழல் ஒழிப்புத் துறை பலமுறை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் கோடிக் கணக்கில் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு துறைகளில் அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் நடைபெற்ற சோதனையில் கணிக்கில் வராத ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பத்திர பதிவுத் துறையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 158 சாா்-பதிவாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments