இடைத்தேர்தல் பிரசாரம்! தங்கை மரகதம் குமரவேலுக்கு வாக்களியுங்கள்! முதல்வர் விஜய் - நேரலை
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரம் தொடர்பான நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்கள்? தவெகவில் இணைந்தது ஏன்? மரகதம் குமரவேல் பேச்சு
ஊழலற்ற ஆட்சி என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக, எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்கள், தீய சக்தி திமுகவுடன் இணைவதற்கு அதிமுக முடிவு செய்த போதுதான், கட்சியிலிருந்து வெளியேறி ராஜிநாமா செய்தேன் என்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் திமுகவுக்கு பெயர் பாஜக! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பேச்சு
திமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை, தில்லியில் இருக்கும் பாஜகவுக்கு பெயர் திமுக, தமிழ்நாட்டில் இருக்கும் திமுகவுக்கு பெயர் பாஜக என்று கூறினார்.
ஊழலின் ஊற்றுக்கண் திமுக
ஊழலின் ஊற்றுக்கண் திமுக எனக் கூறினால், அப்போது நான் பிறக்கவே இல்லை என்கிறார்கள். நான் எப்போது பிறந்தால் உங்களுக்கு என்ன? ஊழல் என்றால் ஆதாரத்தை காட்ட சொல்கிறார்கள். காட்டினால் நீதிமன்றத்தில் நிரூபியுங்கள் என்கிறார்கள். ஏன், எதற்கு கத்துறாங்கனு ஒன்னும் புரியவில்லை. நான் குழம்பிவிட்டேன். பேசு பேசு என்கிறார்கள், பேசினால் பேச விடாமல் இருக்க கத்துகிறார்கள்.
Advertisement
Advertisement
திமுகவின் கிளையாக அதிமுக
நீங்கள் விசில் சின்னத்துக்கு வாக்களிப்பது, பெண்களை ஆபாசமாக பேசுபவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை. திமுகவுக்கு வாக்களித்தால் பெண்களை ஆபாசமாக பேசுவதற்கு ஆதரவளிப்பதற்கு சமம். அதிமுக தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன்
மதுராந்தகம் இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாலை வலம்!
மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் விஜய். இதன்பின்னர் அங்கிருந்து சாலைவலம் மேற்கொண்டு வருகிறார்.
மதுராந்தகம் புறப்பட்டார் விஜய்
சென்னை, நீலாங்கரை இல்லத்திலிருந்து மதுராந்தகம் பிரசாரத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார்.
கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பூஞ்சேரி, திருக்கழுகுன்றம், ஈசூா்-பூதூா், மதுராந்தகம் வழியாக அச்சிறுப்பாக்கம் அருகில் உள்ள ஆத்தூா் சுங்கச்சாவடி வந்து மைதான கூட்டரங்கை அடையவுள்ளார்.
யாருக்கெல்லாம் அனுமதி இல்லை?
கா்ப்பிணிகள், சிறுவா் - சிறுமியா், மாணவ - மாணவியா், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவா்கள் உள்ளிட்டவா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என தவெக பொதுச் செயலரும் அமைச்சருமான என். ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
5,000 பேருக்கு அனுமதி
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பிரசார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. க்யூஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 போ் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள்.
சாலை வழியாக செல்லும் முதல்வர்
மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பேச முதல்வா் விஜய் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பூஞ்சேரி, திருக்கழுகுன்றம், ஈசூா்-பூதூா், மதுராந்தகம் வழியாக அச்சிறுப்பாக்கம் அருகில் உள்ள ஆத்தூா் சுங்கச்சாவடி வந்து மைதான கூட்டரங்கை அடைகிறாா்.
இன்று மாலை பிரசாரம்
மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து, தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (செப். 25) பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.