FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தாராபுரம் இடைத்தேர்தல்: சைக்கிள் பிரசாரத்தின்போது கீழே விழுந்த தவெக எம்எல்ஏ!

தாராபுரம் இடைத்தேர்தல்யொட்டி சைக்கிள் பிரசாரத்தின்போது தடுமாறி கீழே விழுந்த தவெக எம்எல்ஏ பற்றி...

27 செப்டம்பர் 2026, 12:40 pm IST
தவெக சார்பில் சைக்கிள் பிரசாரம்.
பகிர்:

தாராபுரம் இடைத்தேர்தல்யொட்டி தவெக சார்பில் நடைபெற்ற சைக்கிள் பிரசாரத்தின்போது எம்எல்ஏ ஒருவர் தடுமாறி திடீரென கீழே விழுந்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, அமைச்சர்கள் அனந்த், பர்வேஸ் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் தாராபுரம் பகுதிகளில் இன்று சைக்கிளில் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பிரசாரத்தின் இடையே சைக்கிளில் இருந்து தடுமாறி கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா கீழே விழுந்தார்.

Advertisement

Advertisement

உடனே அருகில் இருந்தவர்கள் அவரைப் பத்திரமாகத் தூக்கிவிட்டனர். எம்எல்ஏ கீழே விழுந்ததைக் கவனித்த அமைச்சர் அருண்ராஜ் உடனே தனது சைக்கிளை நிறுத்தி உதவ முன்வந்தார். இருப்பினும், அமைச்சரும் தவெக பொதுச்செயலருமான என். ஆனந்த், எம்எல்ஏ கீழே விழுந்ததைக் கவனித்தும் சைக்கிளை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னேறிச் சென்றார்.

summary

During the bicycle campaign held by TVK for the Dharapuram by-election, an MLA suddenly lost balance and fell down.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments