FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சட்டம் - ஒழுங்கு ஆர்டிஐ! காலை தொடங்கிய எதிர்ப்பு; மதியம் வாபஸ்

பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விலக்கு அளிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டது குறித்து...

27 செப்டம்பர் 2026, 2:17 pm IST
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - கோப்புப்படம்
பகிர்:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விலக்கு அளிக்கப்பட்டதை அரசு திரும்பப் பெற்றது.

பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு, இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிலளிக்கப்படாது என்று இன்று (செப். 27) காலை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

அரசாணையின்படி மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல் துறை சித்ரவதை, விசாரணைக் கைதிகளின் மரணம், துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கைகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இனி பெற முடியாது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

அரசியல் காரணங்கள், சாதிய மோதல்கள், போராட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைக் கையாளுதல் உள்ளிட்ட தகவல்களையும் ஆர்டிஐ-ன் கீழ் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அரசாணைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற அளிக்கப்பட்ட விலக்கை அரசு திரும்பப் பெற்றது.

summary

The exemption granted under the RTI Act regarding the disclosure of certain information related to public law and order has been withdrawn

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments