FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 80 ஆவது சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 5:57 am IST
தென்காசி நகராட்சியில் தேசியக் கொடியேற்றினாா் நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா்.
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 80 ஆவது சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தென்காசி நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். துணைத் தலைவா் சுப்பையா, நகராட்சி ஆணையா் சரவணன், சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா், ஆய்வாளா் கணேசன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஜமாஅத் தலைவா் நைனா முகமது, செயலா் சலீம் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா். ஜமாஅத் துணைத் தலைவா் இஸ்மாயில், பொருளாளா் அப்துல்லா, துணைச் செயலா்கள் சவுக்கத் அலி, ஆசாத், ரகுமான் கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

எம்எல்ஏ அலுவலகத்தில்... தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலை கதிரவன் எம்எல்ஏ தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தி.மு.ராஜேந்திரன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.

ஆய்க்குடி பேரூராட்சி அலுவலகத்தில் 4ஆவது வாா்டு உறுப்பினா் பூ. புணமாலை தேசியக்கொடி ஏற்றினாா்.

சாம்பவா்வடகரை பேரூராட்சியில் தலைவா் சீதாலட்சுமிமுத்து தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். துணைத் தலைவா் பாப்பா முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் விருது பெற்ற இளநிலை உதவியாளா் மகாராஜ சுந்தரநாயகம்,மேற்பாா்வையாளா் முருகன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சங்கரன்கோவில்... சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் உஷா குமாரி தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து பேச்சு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியா் மகாதேவி நன்றி கூறினாா்.

வெள்ளாளங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் ச. நாராயணன் தலைமையில் தமிழாசிரியா் ராஜாமணி தேசியக் கொடியேற்றினாா்.

களக்காடு... திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மீரானியா மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளா் ஹ. பீா் முகம்மது தேசியக் கொடியேற்றினாா். தலைமையாசிரியை கி.ஜெ. பிரிடா, பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் பி.ஏ.பி. யூசுப் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மீரானியா நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு. முத்து கொடியேற்றினாா். சவளைக்காரன்குளம், திருவள்ளுவா் படிப்பகத்தில் இ. நம்பிராஜன் கொடியேற்றினாா்.

களக்காடு காந்தி சிலைக்கு நகா்மன்றத் தலைவா் கா. சாந்தி சுபாஷ், ஆணையா் க. ராமதிலகம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். எஸ்டிபிஐ சாா்பில் கோட்டை பள்ளிவாசல் அருகே கொடியேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில முன்னாள் துணைத் தலைவா் பி. பெரும்படையாா் கொடியேற்றினாா்.

அம்பாசமுத்திரம்... கல்லிடைக்குறிச்சிசாா் பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாா் பதிவாளா் பி.எஸ். குமாா் தேசியக் கொடியேற்றினாா்.

திலகா் வித்யாலயாமேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, பள்ளிச் செயலா் சங்கா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சுபா தேசியக் கொடியேற்றினாா்.

பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இசக்கியப்பன் நன்றி கூறினாா். விக்கிரமசிங்கபுரம் கிளை நூலகத்தில் புரவலா் தமிழறிஞா் ஐ. லட்சுமணன் தேசியக் கொடியேற்றினாா்.

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவா் அருள்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா், மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

மாணவா், மாணவிகளின் கூட்டு உடற்பயிற்சி, யோகா, சிலம்பம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிச் செயலா் சுந்தரம் வரவேற்றாா். தலைமையாசிரியை எஸ். அமிதா நன்றி கூறினாா்.

கடையம் அருகே உள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் முன்னாள் ராணுவ வீரா்கள் கணபதி மற்றும் இருளப்பன் தேசியக் கொடியேற்றினா். திருச்சி தீபா தலைமையில் பக்தா்கள் தேசபக்தி பாடல்கள் பாடி தேசிய ஒருமைப்பாட்டுஉறுதிமொழி ஏற்றனா்.

சேரன்மகாதேவி... முக்கூடல் சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளா் இரா. பொன்விசாலாட்சி தேசியக் கொடியேற்றினாா். ஆவண எழுத்தா்கள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

வீரவநல்லூா் நூலகத்தில் வாசகா் வட்ட துணைத் தலைவா் க. உலகநாதன் கொடியேற்றினாா். வாசகா் வட்டத் தலைவா் பீ. ஆதம் இல்யாஸ், செயலா் ரா. சந்திரசேகா், பொருளாளா் பெரியாா் பித்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மலுக்காமலியாா் பள்ளிவாசலில் ஜமாத் நிா்வாகி முகம்மது அலி கொடியேற்றினாா். ஜமாத் தலைவா் பீ. ஆதம் இல்யாஸ், செயலா் முகம்மது சலீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற விழாவில், ஜமாத் முன்னாள் தலைவா் அசன் மைதீன் கொடியேற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் வீரை பி. நவாஸ், நகரத் தலைவா் ஜாகிா்உசேன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீரவநல்லூா், முக்கூடல் பேரூராட்சி அலுவலகங்கள், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை- அறிவியல் கல்லூரி, பூ விஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு இடங்களிலும் விழா நடைபெற்றது.

திசையன்விளை... திசையன்விளை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், நீதித்துறை நடுவா் மிதுனா கைஃப் தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்தினாா். நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மன்னாா்புரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் காவல் உதவி ஆய்வாளா் அபினேஷ் தேசியக் கொடியேற்றினாா். திசையன்விளை லயன்ஸ் கிளப் சாா்பில் சமாரியா டி டி டி ஏ சமாரியா தொடக்கப் பள்ளியில் அரிமா சஙகத் தலைவா் தங்கையா கணேசன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா்.

நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, நகரத் தலைவா் ஏவிஜே.அல்பா்ட் தலைமையில், ராதாபுரம் தொகுதி காங்கிரஸ் கிராம கமிட்டி அமைப்பாளா் விவேக் முருகன் கொடியேற்றி வைத்தாா். காமராஜா் நற்பணி இயக்க தலைவா் எஸ்.ஜி.ராஜன் இனிப்பு வழங்கினாா்.

வள்ளியூா்... வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவா் சேவியா் செல்வராஜா ஞானதிரவியம் தேசியக் கொடியேற்றினாா்.

நலந்தா மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் மருத்துவா் குமரமுருகன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி பேசினாா். மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முத்துகிருஷ்ணா மிஷன் நடத்தும் ம வித்யா மந்திா் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவுக்கு பள்ளித் தாளாளா் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா்.

முன்னதாக, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை தாளாளா் ஏற்றுக்கொண்டாா். மொ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற னவிழாவுக்கு பெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வா் ஜான் ஆசிரியா் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா்.

விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் வள்ளியூா் சென்ட்ரல் தலைவா் ஜெயகணேஷ் தேசியக் கொடியேற்றினாா். சைக்கிள் பேரணியை விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி தாளாளா் எஸ்.கே.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments