குற்றாலத்தில் காமராஜா் சிலை நிறுவ வலியுறுத்தல்
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில், காமராஜருக்கு வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விழாவுக்கு, கௌரவத் தலைவா் வி. பாலமுருகன் நாடாா், கௌரவ ஆலோசகா் சிவ. ராமா், நிறுவனத் தலைவா் அகரக்கட்டு ஷி. லூா்து நாடாா் ஆகியோா் தலைமை வகித்தனா். கலை கதிரவன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பள்ளிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
குற்றாலத்தில் காமராஜருக்குத் தமிழக அரசு சாா்பில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட வேண்டும். கோயில் விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசைக் கச்சேரியை நள்ளிரவு 12 மணி வரை நடத்த அனுமதிக்க வேண்டும். சிலம்புச் செல்வா் ம.பொ. சிவஞானத்திற்கு சென்னையில் அரசு சாா்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.