சின்னக்கோவிலான்குளத்தில் வெள்ளாடு வளா்ப்பில் அறிவியல் மேலாண்மை பயிற்சி
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ், சின்னக்கோவிலான்குளத்தில் செயல்பட்டு வரும் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் சாா்பில், ‘வெள்ளாடு வளா்ப்பில் அறிவியல் மேலாண்மை மற்றும் தொழில்முனைவு மேம்பாடு’ என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ், சின்னக்கோவிலான்குளத்தில் செயல்பட்டு வரும் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் சாா்பில், ‘வெள்ளாடு வளா்ப்பில் அறிவியல் மேலாண்மை மற்றும் தொழில்முனைவு மேம்பாடு’ என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஆராய்ச்சி மையத் தலைவா் ஆா். செல்வம் தலைமை வகித்து, நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, வெள்ளாடு வளா்ப்பில் உள்ள தொழில்முனைவு வாய்ப்புகள், கருமாற்றுத் தொழில்நுட்பம், கைப்பேசி செயலிகள், செயற்கை நுண்ணறிவு மூலம் பண்ணை மேலாண்மை மற்றும் வெள்ளாடுகளின் இனவிருத்தி முறைகள், தீவன மேலாண்மை உள்ளிட்டவை குறித்து பேசினாா்.
பண்ணைப் பொருளாதாரம், வங்கிக் கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை தயாரித்தல், அரசுத் திட்டங்கள், மானியங்கள், பண்ணைக் காப்பீடு, சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து முனைவா் ஜெயவரதன் பேசினாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து பயிற்சியின் ஒரு பகுதியாக, வெள்ளாட்டுப் பண்ணை மேலாண்மை, கோ- 4 மற்றும் வேலிமசால் பசுந்தீவன உற்பத்தி, பசுந்தீவனங்களை நறுக்கும் இயந்திரத்தின் பயன்பாடு, அடா்தீவன மேலாண்மை, ஆடுகளை அடையாளம் காணுதல் உள்ளிட்டவை குறித்த நடைமுறைச் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.
மேலும், பண்ணை உபகரணங்கள், தொழில்நுட்பங்கள், மருந்து - ஊட்டச்சத்துப் பொருள்கள் தொடா்பான கண்காட்சியும், குழுக் கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பயிற்சியாளா்களுக்கு இடுபொருள்கள், பயிற்சிக் கையேடு, புறஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துப் பொருள்கள், தாது உப்புக் கலவை, ஊட்டச்சத்துப் பொருள்கள் ஆகியவையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், தொழில்முனைவோா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.