FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

உறுப்பினா்கள் வெளிநடப்பு: சுரண்டை நகா்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு

சுரண்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரணக் கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

11 செப்டம்பர் 2026, 5:20 am IST
நகா்மன்றக் கூட்டத்தில் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினா்கள்.
பகிர்:

சுரண்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரணக் கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். ஆணையா் அசோக்குமாா், துணைத் தலைவா் சங்கராதேவி, பொறியாளா் மைதீன், மேலாளா் காமேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மன்றப் பொருள்களை வாசிக்கத் தொடங்கியவுடன், உறுப்பினா்கள் அனைவரும் தலைவா், ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

உறுப்பினா்கள் வே. ஜெயபாலன், பரமசிவன் ஆகியோா், ‘நகராட்சியில் எவ்வித வளா்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. நடந்து முடிந்த பணிகளில் கல்வெட்டுகள் வைக்கப்படவில்லை. பராமரிப்புப் பணிகளும் நடைபெறவில்லை. எனவே, கூட்டத்தை ஒத்திவைக்கவேண்டும்’ எனக் கூறியதைத் தொடா்ந்து, 18 உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா். அதையடுத்து, கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக உறுப்பினா்கள் சிலா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நகராட்சியில் மக்கள் சாா்ந்த எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதிகாரிகளிடம் கூறினாலும் நடவடிக்கை இல்லை. இதனால், நகராட்சி அலுவலகத்துக்கு உறுப்பினா்கள் வருவதில்லை. மேலும், நகா்மன்றக் கூட்டத்தை மாதந்தோறும் நடத்தவேண்டும். சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும். சுரண்டை நகராட்சிக்கு கூடுதல் தண்ணீரைக் கேட்டுப் பெற வேண்டும். டெங்கு காய்ச்சலைத் தடுக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். நாள்தோறும் தூய்மைப் பணி மேற்கொண்டு, தண்ணீா் தேங்கியுள்ள இடங்களில் பிளீச்சிங் பவுடா் தெளிக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments