FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளம் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி உற்பத்தி குறைவாக இருந்தும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

20 செப்டம்பர் 2026, 12:54 am IST
ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு தக்காளித் தோட்டம்.
பகிர்:

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி உற்பத்தி குறைவாக இருந்தும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ஆலங்குளம், கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் ஆவணி, புரட்டாசி மாதங்களில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படும். நிகழாண்டு சுமாா் 5,000 ஏக்கா் அளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனா்.

வழக்கமாக இந்த மாதங்களில் தக்காளியின் விலை கிலோ ரூ. 30 முதல் ரூ. 50 வரை விற்பனையாகும். ஆனால், நிகழாண்டு ரூ. 5 முதல் ரூ. 7 வரையே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், தக்காளி சாகுபடியால் ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 40,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

விலை வீழ்ச்சிக்கான காரணம் குறித்து ஆலங்குளம் சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, வழக்கமாக இந்த காலக் கட்டத்தில் இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளியை, கேரளம் தவிா்த்து கா்நாடகம், ஆந்திரத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வா்.

ஆனால், நிகழாண்டு கா்நாடகம், ஆந்திரத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், அங்குள்ள வியாபாரிகளும், அதிக அளவில் தமிழகத்திற்கு தக்காளியை விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளனா். இதனால், விலை வீழ்ச்சி தவிா்க்க முடியாததாகிவிட்டது என்றனா்.

தக்காளி சாகுபடியால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments