FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் குப்பைகளைத் தரம்பிரித்து வழங்க அறிவுறுத்தல்

21 செப்டம்பர் 2026, 2:11 am IST
குப்பைக் கிடங்கு - கோப்புப் படம்
பகிர்:

சங்கரன்கோவில் நகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை 4 வகையாகப் பிரித்து வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையா் த. லெட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் உருவாகும் குப்பைகளை 4 வகையாகத் தரம்பிரித்து, நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் தனித்தனியாக வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

தினசரி உருவாகும் குப்பைகளை அவற்றின் தன்மைக்கு ஏற்ப பிரித்து வழங்குவதன் மூலம், மக்கும் கழிவுகளை உரமாகவும், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை மீண்டும் பயன்பாட்டிற்கும், சுகாதார மற்றும் அபாயகரக் கழிவுகளை பாதுகாப்பான முறையிலும் கையாள முடியும்.

காய்கறி, பழத் தோல்கள், உணவு உள்ளிட்ட கழிவுகளை பச்சை நிறத் தொட்டியிலும், காகிதம், அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக், உலோகப் பொருள்கள், பாட்டில்கள், துணிகள், மறுசுழற்சி செய்யக் கூடிய உலா் கழிவுகளை நீல நிறத் தொட்டியிலும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள், டயப்பா்கள் மற்றும் பிற சுகாதாரக் கழிவுகளை பாதுகாப்பாகப் பொட்டலமிட்டு சிவப்பு நிறத் தொட்டியிலும், பேட்டரிகள், பயன்படுத்தப்பட்ட மின்விளக்குகள், ரசாயனப் பொருள்கள், பெயிண்ட், பூச்சிக்கொல்லி மருந்துகளின் காலி டப்பாக்கள் போன்ற கழிவுகளை தனியாகப் பிரித்து கருப்பு நிறத் தொட்டியிலும் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments