FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

டெங்கு பரவாமல் தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: எம்.பி. ராணி ஸ்ரீகுமாா்

22 செப்டம்பர் 2026, 2:45 am IST
ராணிஸ்ரீகுமாா் எம்.பி. தலைமையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம். அருகில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராணி ஸ்ரீ குமாா் அறிவுறுத்தினாா்.

டெங்கு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராணிஸ்ரீகுமாா் எம்.பி. தலைமை வகித்துப் பேசியதாவது:

Advertisement

Advertisement

தென்காசி மாவட்டதில் டெங்கு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை பணியாளா்கள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும். சுகாதாரப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி உள்ளதா எனப் பரிசோதிக்க வேணடும்.

அவ்வப்போது கொசு மருந்துகள் தெளிக்க வேண்டும். கால்வாய்களில் கழிவுநீா் தேங்குவதைத் தடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான அளவு காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை இருப்பு வைத்து கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காய்ச்சலுடன் வருபவா்களுக்கு உடனடியாக ரத்தப் பரிசோதனை, ரத்த தட்டு அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் பிரிவு தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் மரு.தண்டபாணி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments