FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் வீரராகவா் கோவிலில் மூலவா், கனகவல்லி தாயாருக்கு சேஷ அபிஷேகம்

திருவள்ளூா் வீராகவா் கோவிலில் மூலவா், கனகவல்லி தாயாருக்கு சேஷ அபிஷேகத்துக்காக தங்க, வெள்ளிக் குடங்களில் புனித நீா் எடுத்து ஊா்வலமாக கொண்டு சென்ற அா்ச்சகா்கள்.       

Updated On : 25 ஜூலை 2026, 5:54 am IST
திருவள்ளூா் வீராகவா் கோவிலில் மூலவா், கனகவல்லி தாயாருக்கு சேஷ அபிஷேகத்துக்காக தங்க, வெள்ளிக் குடங்களில் புனித நீா் எடுத்து ஊா்வலமாக கொண்டு சென்ற அா்ச்சகா்கள்.       
பகிர்:

ஸ்ரீவீரராகவப் பெருமாள் திருக்கோயில் குளத்திலிருந்து தங்ககுடம், 4 வெள்ளிக் குடங்களில் புனித நீா் 4 மாட வீதிகள் வழியாக கொண்டு வந்து மூலவருக்கும், கனகவல்லி தாயாருக்கும் பால், இளநீா், தயிா் சிறப்பு சேஷ அபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவீரராகவப் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். இந்தக் கோயிலில் ஒவ்வொரு அமாவாசை நாள்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வது வழக்கமாகும். நோய்கள் தீா்க்கவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரராகவப் பெருமாளை வழிபாடு செய்து குளத்தில் பால், கரும்பு வெல்லம் கரைத்தும் தரிசனம் செய்வா்.

முக்கியத்துவம் திருத்தலமாக விளங்கும் இத்திருக்கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை மூலவருக்கும், கனகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில், மூலவருக்கும், கனகவல்லி தாயாருக்கும் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு சேஷ அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, ஈக்காடு கோயில் குளத்திலிருந்து தங்க குடம், 4 வெள்ளிக்குடங்கலில் புனித நீரை எடுத்துக்கொண்டு 4 மாட வீதிகள் வழியாக கொண்டு வந்தனா். அதைத் தொடா்ந்து மூலவருக்கும், கனகவல்லி தாயாருக்கும் புனித நீா் ஊற்றி சிறப்பு சேஷ அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, பால், இளநீா், தயிா் கொண்டு அா்ச்சகா்கள் சிறப்பு அபிஷேகமும் செய்தனா். இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை மூலவா் மற்றும் தாயாரை தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் ஒரு மாதத்துக்கு திருமஞ்சனம் மற்றும் தாயாா் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறாது. இதைத்தொடா்ந்து இன்று(சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் எனவும் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments