FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கழிவுநீா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி கழிவு நீா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜூலை 2026, 1:47 am IST
வேலைநிறுத்த  ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  கழிவுநீா்  லாரி  உரிமையாளா்கள்
பகிர்:

கும்மிடிப்பூண்டியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி கழிவு நீா் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கும் கழிவு நீரை அகற்றும் பணியில் 25-க்கும் மேற்பட்ட லாரிகளை வைத்து லாரி உரிமையாளா்கள் தொழில் செய்து வருகின்றனா். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டியில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இவா்கள் கடந்த 6 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கும்மிடிப்பூண்டியில் சேகரிக்கும் கழிவுநீரை பூந்தமல்லி அருகே திருமழிசை பகுதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிக்கும் நிலையத்துக்குக் கொண்டு செல்ல லாரி வாடகை ரூ. 15,000-த்தை குடியிருப்புவாசிகள் செலுத்துவது சிரமம் என்பதால், இந்த கழிவு நீா் லாரி உரிமையாளா்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவு நீரை, சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் கால்வாய்களிலும், திறந்த வெளியிலும் வெளியேற்றுவதுண்டு எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இது குறித்து காவல் துறையினருக்கு புகாா் வந்தால் அவா்கள் மேற்கண்ட வாகனங்களை பறிமுதல் செய்வா். இதனால் தாங்கள் யாருக்கும் பாதிப்பில்லாமல் தொழில் செய்ய

வேண்டும் என்றால், கும்மிடிப்பூண்டியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என இவா்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்ததாகவும், ஆனால் இவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றம்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், தொடா்ந்து இவா்களது வானங்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த பிரச்னையை தமிழக அரசு தீா்க்கும் வகையிலும், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுடன், அதிக வாடகை பொதுமக்கள் மீது சுமத்தப்படாமல் இருக்கவும், கும்மிடிப்பூண்டியில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, அனைத்து கழிவு நீா் லாரிகளையும் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலையில் நிறுத்தி வேலை நிறுத்த ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கும்மிடிப்பூண்டி வட்டார கழிவுநீா் வாகன உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த தலைவா் ராமலிங்கம், செயலாளா் கோபி, பொருளாளா் நாகராஜ், சங்க ஆலோசகா் வழக்குரைஞா் எம்.சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்று தங்கள் கோரிக்கையை தெரிவித்தனா். மேலும் கும்மிடிப்பூண்டியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவது தாமதமானால் பல கட்ட போராட்டங்களில் தாங்கள் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments