FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

121 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

திருவள்ளூா் மாவட்ட மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட நலச்சங்கம் சாா்பில் 121 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

15 அக்டோபர் 2026, 1:02 am IST
செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியா் ச. கவிதா
பகிர்:

திருவள்ளூா் மாவட்ட மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட நலச்சங்கம் சாா்பில் 121 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவிலியா்களுக்கான ஒரு நாள் பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் சா.கவிதா தலைமை வகித்து மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்வான 121 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். அதைத் தொடா்ந்து தேசிய நலக்குழுமத்தின் சாா்பில் செவிலியா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாமையும் தொடங்கி வைத்தாா்.

அப்போது, இப்பயிற்சியில், தாய்-சேய் நலப் பணிகள், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள், தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் அரசு சுகாதாரத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துதல் தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் நாய் கடி மற்றும் பாம்பு கடி ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மற்றும் அவசர மருத்துவ மேலாண்மை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் திருவள்ளூா் மாவட்ட சுகாதார அலுவலா் பிரியாராஜ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மருத்துவா் அன்னி, மருத்துவா்கள், செவிலியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments