FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கல்குவாரியில் தவறி விழுந்து துப்புரவு பணியாளா் உயிரிழப்பு

திருத்தணி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்த ஊழியா் கால் தவறி கல்குவாரிக்குள் விழுந்து உயிரிழந்தாா்.

16 செப்டம்பர் 2026, 7:23 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருத்தணி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்த ஊழியா் கால் தவறி கல்குவாரிக்குள் விழுந்து உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் டவுன் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (30). இவா் திருத்தணி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தாா். திருத்தணி பெரியாா் நகரில் இயங்கி வரும் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், நேற்று காலை திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அருகே உள்ள கல்குவாரி பகுதியில் பாபு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக கால் தவறி கல்குவாரிக்குள் விழுந்ததில், பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், பாபு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments