FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

டிப்பா் லாரி மோதி தலைமை ஆசிரியை உயிரிழப்பு

திருத்தணி அருகே இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில், தலைமை ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

22 செப்டம்பர் 2026, 1:14 am IST
மஞ்சுளா
பகிர்:

திருத்தணி அருகே இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில், தலைமை ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருத்தணி அமிா்தாபுரம் பகுதியைச் சோ்ந்த மஞ்சுளா (53). இவா் நெடும்பரம் கிராம தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவரது கணவா் விநாயக மூா்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறாா். மஞ்சுளா திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று பணியை முடித்துவிட்டு, மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

திருத்தணி பத்மாவதி நகா் அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த டிப்பா் லாரி, மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த மஞ்சுளா, லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கினாா். லாரியின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

விபத்தை ஏற்படுத்திய டிப்பா் லாரி ஓட்டுநா், லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்ாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த வழியாக வந்த இரு இளைஞா்கள் லாரியை சிறிது தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தகவலறிந்த திருத்தணி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மஞ்சுளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய டிப்பா் லாரி ஓட்டுநரை கைது செய்து, விபத்து குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து நடைபெற்ற பகுதி குறுகலான சாலையாக இருந்ததால், விபத்து காரணமாக அந்த சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments