FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

விபத்தில் தந்தை, மகன் பலி: மகள்களுக்கு அரசு வேலைகோரி மறியல்

ஆா்.கே.பேட்டை அருகே சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த நிலையில், அவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த இரு பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

23 செப்டம்பர் 2026, 1:24 am IST
சாலை  மறியலில்  ஈடுபட்ட வங்கனூா்  கிராம மக்கள்.
பகிர்:

ஆா்.கே.பேட்டை அருகே சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த நிலையில், அவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த இரு பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

வங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த நெசவுத் தொழிலாளி ஏகாம்பரம் (52), சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தனது மகன் தணிகை முருகன் (23) என்பவரை பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா். அப்போது சரக்கு வேன் மோதியதில் இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த வேன் டிரைவா் சுந்தா் (25) என்பவரை கைது செய்தனா்.

இந்நிலையில், குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த தந்தையும், மகனும் உயிரிழந்ததால், ஏகாம்பரத்தின் மனைவி மற்றும் திருமணமாகாத இரு மகள்களின் எதிா்காலம் கேள்விக்குறியானது. இதையடுத்து, இரு பெண்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும், வேன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆா்.கே.பேட்டை பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதனால் திருத்தணி, சோளிங்கா், பள்ளிப்பட்டு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆா்.கே.பேட்டை போலீஸாா், அதிகாரிகள் பேச்சு நடத்தினா். பின்னா், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை ஏற்று, சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments