FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

சென்செக்ஸ் 259.75 புள்ளிகள் உயர்ந்து 80,501.99 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 12.50 புள்ளிகள் உயர்ந்து 24,346.70 புள்ளிகளில் நிலைபெற்றது.

Updated On : 2 மே 2025, 6:11 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

மும்பை: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத ஜிஎஸ்டி வசூல் மற்றும் தொடர்ந்து வரும் அந்நிய நிதி வரத்து ஆகியவற்றால் மும்பை பங்குச் சந்தை, குறியீடான சென்செக்ஸ் உயர்ந்தது முடிந்தது.

இன்றை காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 935.69 புள்ளிகள் உயர்ந்து 81,177.93 புள்ளிகளாக இருந்தது. வர்த்த நேர முடிவில் ஏற்ற-இறக்கங்கள் மத்தியில், சென்செக்ஸ் குறியீடு 259.75 புள்ளிகள் உயர்ந்து 80,501.99 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 12.50 புள்ளிகள் உயர்ந்து 24,346.70 புள்ளிகளில் நிலைபெற்றது.

பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மாருதி, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் நெஸ்லே, என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி, பவர் கிரிட் மற்றும் டைட்டன் ஆகியவை சரிந்து முடிந்தன.

Advertisement

Advertisement

துறை வாரியாக மீடியா, எனர்ஜி, ஐடி, எண்ணெய் & எரிவாயு 0.3 முதல் 0.7 சதவிகிதம் உயர்ந்தும் மின்சாரம், மெட்டல், டெலிகாம், பார்மா, ரியாலிட்டி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் 0.5 முதல் 2 சதவிகிதமும் சரிந்து முடிந்தன.

ஐரோப்பிய குறியீடுகள் லாபங்களுடன் வர்த்தகமான நிலையில், சீனா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளை மதிப்பீடு செய்வதாகக் கூறியதையடுத்து ஆசிய குறியீடுகள் உயர்ந்தன. இது கட்டண பதட்டங்கள் தணிக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பங்குகள் சார்ந்த நடவடிக்கையில், அதானி போர்ட்ஸ் 4-வது காலாண்டு லாபம் 4% அதிகரித்து அதன் பங்குகள் 4% உயர்ந்தது, பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் ஃபைனான்ஸ் 1.73 கோடி பங்குகள் கைமாறியதையடுத்து 4 சதவிகிதம் உயர்ந்தது.

நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 4-வது காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 65% உயர்ந்ததால் அதன் பங்குகள் 5.5 சதவிகிதமும், ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்குகள் மார்ச் காலாண்டு நிகர லாபம் 46 சதவிகிதம் உயர்ந்து ரூ.113.4 கோடியாக உயர்ந்தது.

இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் Q4 லாபம் சரிந்ததால், அதன் பங்குகள் 7 சதவிகிதமும் சரிந்து முடிந்தன.

காட்ஃப்ரே பிலிப்ஸ், யுபிஎல், கோரமண்டல் இன்டர்நேஷனல், நவீன் ஃப்ளோரின், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஹெக்ஸாகாம், மேக்ஸ் பைனான்சியல், மசகான் டாக் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடும், டோக்கியோவின் நிக்கேய் 225 மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிந்து முடிந்தன.

ஐரோப்பிய சந்தைகள், அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்ந்து முடிந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.82 சதவிகிதம் குறைந்து 61.62 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ரூ.50.57 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments