இந்தியாவில் அதிகம் விற்பனையான இவி கார்கள்: முதலிடத்தில் எம்ஜி விண்ட்சர்!
2026-ல் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்கள் பற்றி..
2026- ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பட்டியலில் எம்.ஜி விண்ட்சர் இவி முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 19,080 கார்கள் விற்பனையாகி, இந்தியாவில் அதிகம் விற்பனையான எலெக்ரிக் கார்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.
18,074 கார்களுடன் மஹேந்திரா எக்ஸ் இவி 9எஸ் இரண்டாம் இடத்தையும், 16,567 கார்களுடன் டாடா நெக்சான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
Advertisement
Advertisement
நான்காம் இடத்தில் டாடா பன்ஞ் இவி 15,683 கார்களும், 11,242 கார்களுடன் மஹேந்திரா எக்ஸ்இவி 9இ ஐந்தாம் இடத்திலும், டாடா ஹரியர் இவி 10,499 கார்களுடன் ஆறாவது இடத்திலும்,
8,572 கார்களுடன் மாருதி இ விடாரா ஏழாவது இடத்திலும், டாடா கர்வ் இவி 7,281 கார்களுடன் 8-வது இடத்திலும், 6,849 கார்களுடன் மஹேந்திரா பிஇ6 ஒன்பதாவது இடத்திலும், கடைசி இடத்தில் டாடா டியாகோ 6,816 கார்களும் விற்பனையாகியுள்ளது.
எம்ஜி விண்ட்சர் இவி
2026ல் முதல் ஆறு மாதங்களில் 19,080 கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில், இதன் ஆரம்ப விலை ரூ. 9.99 லட்சம் முதல் தொடங்குகிறது. ஒரு மாதத்திற்குக் கிட்டத்தட்ட 3,180 கார்கள் வரை விற்பனையாகின்றது. ஆனால், 2025 ஆண்டோடு ஒப்பிடுகையில் 2026-ல் 10 சதவீதம் குறைவாக விற்பனையாகியுள்ளது. அதாவது 2025-ல் 21,109 கார்கள் விற்கப்பட்ட நிலையில் 2026-ல் 19,080 கார்கள் மட்டும் விற்பனையானது.
38 கிலோவாட் பேட்டரி 332 கி.மீ வரையிலும், 52.9 கிலோவாட் பேட்டரி கொண்ட புரோ மாடல் 449 கி.மீ. வரையிலும் பயணிக்கும் திறன் கொண்டது, டிசி பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
India’s electric passenger vehicle market witnessed a major reshuffling during the first half of 2026. While the MG Windsor remained the country’s best-selling electric car, several newly introduced models rapidly climbed the rankings and challenged established EVs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.