பட்டியலிடப்பட்ட மீனாட்சி இந்தியா பங்குகள் 5% உயர்வு!
மும்பை பங்குச் சந்தையில் தனது அதிகாரப்பூர்வமாக வர்த்தகத்தை இன்று முதல் தொடங்கி அதன் பங்குகள் ரூ. 281.99 என்ற விலையில் அறிமுகமானது.
புதுதில்லி: ஆடை தயாரிப்பு நிறுவனமான மீனாட்சி இந்தியா லிமிடெட், மும்பை பங்குச் சந்தியில் தனது அதிகாரப்பூர்வமாக வர்த்தகத்தை இன்று முதல் தொடங்கி அதன் பங்குகள் ரூ. 281.99 என்ற விலையில் அறிமுகமானது.
இந்தபங்கு ரூ. 281.99 ஆக வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில், விரைவிலேயே 5% மேல் வரம்பு அளவான ரூ. 296.08 ஐ எட்டியது.
மொத்தம் 1.125 கோடி ஈக்விட்டி பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. அதே வேளையில், கொல்கத்தா பங்குச் சந்தையிலும் தொடர்ந்து பட்டியலிடப்பட்டிருக்கும்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2030 ஆம் நிதியாண்டிற்குள் தனது ஆண்டு உற்பத்தித் திறனை உயர்த்த சுமார் ரூ. 40 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இந்த உற்பத்தித் திறன் விரிவாக்கமானது, 2030 ஆம் நிதியாண்டிற்குள் ரூ. 450 முதல் 500 கோடி வருவாயை ஈட்டும் என்ற இலக்கை அடைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Apparel manufacturer Meenakshi India Ltd officially commenced trading on the BSE main board.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.