FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

காரா ஏஐ-யுடன் புதிய ஜீப் மெரிடியன்! 85 யூனிட்கள் மட்டுமே விற்பனை!!

ஜீப் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்..

Updated On : 30 ஜூலை 2026, 6:07 pm IST
ஜீப் மெரிடியன் - X
பகிர்:

ஜீப் பிராண்டின் 85-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில்,ஜீப் இந்தியா நிறுவனம் மெரிடியன் எஸ்யூவியின் சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரம்ப விலை ரூ. 36.05 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புப் பதிப்பு மாடல், வெளிப்புறத்தில் தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களையும், உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட சில வசதிகளையும் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 85 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரவிருக்கும் இதில் சிறப்புப் பதிப்பு பேட்ஜ்கள், சிறப்பு இருக்கை அலங்காரம், புதிய காரா செய்யறிவு குரல் உதவியாளர் இடம் பெற்றுள்ளது. குரல் கட்டளைகள் மூலம் சில வாகன அம்சங்களை இயக்க முடியும்.

Advertisement

Advertisement

இதில் 10.1 அங்குல தொடுதிரை, பனோரமிக்சரூப், காற்றோட்ட வசதி கொண்ட இருக்கைகள், 52 மொழிகளில் நெவிகேஷன், வானிலை தகவல்கள், அழைப்புகள், இசை மற்றும் வாகனம் சார்ந்த குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு காரா(CARA AI) செய்யறிவை பயன்படுத்தலாம்.

மெரிடியன் காரின் வழக்கமான லிமிடெட் (O) வேரியண்டிலும் CARA வசதி இப்போது வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 45,000 அதிகரித்து, ரூ. 30.45 லட்சமாக உள்ளது.

மெரிடியன் 85வது ஆண்டுவிழா பதிப்பானது, இந்த எஸ்யூவியின் உயர் ரக ஓவர்லேண்ட் டிரிம்மை அடிப்படையாகக் கொண்டது. இதன் இயந்திர அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது இதன் பானட்டின் கீழ் 170hp/350Nm திறன் கொண்ட 2.0-லிட்டர் டீசல் இன்ஜின், 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. விருப்பத் தேர்வாக 4x4 சிஸ்டத்தையும் இதில் தேர்வு செய்துகொள்ளலாம்.

அதேபோன்று ஓவர்லேண்ட் டிரிம்மை விட கூடுதல் விலையும் இல்லை. இதன் உற்பத்தி எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், வாங்க விரும்புவோர் விரைந்து செயல்படுவது நல்லது. இதற்கான முன்பதிவுகள் ஜீப் விற்பனையகங்களிலும், ஜீப் இந்தியாவின் இணையதளத்திலும் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments