FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிலைபெற்றது.

Updated On : 31 ஜூலை 2026, 6:03 pm IST
இந்திய ரூபாய்
பகிர்:

மும்பை: வெளிநாட்டு மூலதனம் வரத்தும் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆதரவு உள்ளிட்டவையால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிலைபெற்றது.

இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலர் வலுப்பெற்றதால் ரூபாயின் ஏற்றத்தை இது வெகுவாக தடுத்தது. அதேவேளையில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் சந்தையில் ஒருவித நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி வருவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.40 ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின்போது இது ரூ. 95.25 முதல் ரூ. 95.46 என்ற வரம்பிற்குள் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் முடிவை விட 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக முடிந்தன.

Advertisement

Advertisement

நேற்றும் ரூபாய் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ. 95.50 ஆக நிறைவடைந்தது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது.

summary

The rupee remained on Friday, gained 15 paise to settle at 95.35 against US dollar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments